ads

ரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்

ரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்

ரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்

நடிகர் மற்றும் தற்போது தயாரிப்பாளராக மாறியுள்ள சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படம் 'கனா'. இந்த படத்தினை பிரபல பாடகரான அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ள அடுத்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தினை கார்த்திக் வேணுகோபால் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனாக சீரியல் நடிகரான ரியோ ராஜ் நடிக்க உள்ளார்.

அவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்பவர் நடிக்க உள்ளார். காமெடி நடிகராக ஆர்ஜே விக்னேஷ் மற்றும் பிரபல அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. 

ரியோவுடன் இணைந்து தன்னுடைய அடுத்த படத்தினை துவங்கிய சிவகார்த்திகேயன்