ads

சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

sivakarthikeyan next movie

sivakarthikeyan next movie

வேலைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முன்னதாகவே முடிவடைந்த நிலையில் இன்று மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. 

24 Am Studios தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். மேலும் சிவா தற்பொழுது முன்னணி நாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் களமிறக்கி இருப்பதாக தெரிகிறது. இமான் இசையமைப்பளராகவும், பலாசுரமணியன் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.     

பொன்ராமன் படங்கள் என்றாலே காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. இதன் காரணத்தினால் பெயரிடப்படாத இந்த புது படத்திலும் காமெடிகள் அதிகளவு இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் பஸ்ட் லுக் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியிடுவதாக தெரிவித்த படக்குழுவினர் வேறு எவ்வித தகவலையும் வெளிப்படுத்தவில்லை. படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

          

சிவகார்த்திகேயனின் அடுத்த கட்ட படப்பிடிப்பு