ads

நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் சீம ராஜா ட்ரைலர்

இயக்குனர் பொன்ராமின் சீமராஜா படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளனர்.

இயக்குனர் பொன்ராமின் சீமராஜா படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளனர்.

வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் சீம ராஜா படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேசும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர் மற்றும் இசையை படக்குழு வெளியிட்டது.

டி இமான் இசையமைப்பில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரையும் வெளியிட உள்ளது. இதன்படி இந்த படத்தின் ட்ரைலர் நாளை மாலை 7மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாவதற்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட உள்ளனர். இந்த படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். இவர்களுடன் நெப்போலியன், சூரி, யோகி பாபு, மனோபாலா மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

நாளை வெளியாகிறது சிவகார்த்திகேயனின் சீம ராஜா ட்ரைலர்