ads

சூரரை போற்று படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம், எதற்கு?

சூரரை போற்று படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம், எதற்கு?

சூரரை போற்று படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம், எதற்கு?

ஊரடங்கு முடிந்தாலும் தியேட்டர்கள் இயங்க அனுமதி கிடைக்க குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும் என தெரிகிறது. மார்ச் மாதத்தில் ரிலீஸ் ஆன படங்கள் ஐந்து நாட்கள் ஓடிய நிலையில், ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது, இது தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம்.

இவ்வாறு இருக்கும் இந்த சூழலில், நடிகர் சூர்யா சொந்தமாக தயாரித்த படம் தான் பொன்மகள் வந்தாள். இந்த படம் தற்பொழுது ரிலீஸ் ஆகும் நிலையில் உள்ளது, ஆனால் இதை இவர்கள் தீயேட்டரில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியிடுகிறார்கள்.

இதை கேள்விப்பட்ட ரோகிணி தியேட்டரின் உரிமையாளர் பன்னீர் செல்வம், இது போன்ற செயல் முற்றிலும் விதிமுறை மீறல். தியேட்டருக்காக தயாரிக்கும் படங்கள், திரையரங்கில் ஓடிய பின்புதான் அமேசான் பிரைம், நெட் பிலிக்ஸ் விற்கப்படும்.

நடிகர் சூர்யா தரப்பில் தொடர்பு கொண்ட போதும் எந்த ஒரு முறையான தகவுள்கள் சொல்லாமல் இருப்பதால், இனி சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் இவரை சார்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம், என தெரிவித்து உள்ளார்.

சூரரை போற்று படம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய மாட்டோம், எதற்கு?