ads

கோலாகலமாக நடைபெற்ற சூப்பர் ஸ்டார் பேரன் வேத் பிறந்த நாள் விழா

Photo Credit - @soundaryaarajni (Twitter)

Photo Credit - @soundaryaarajni (Twitter)

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள்கள் சவுந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் அனிமேஷன் துறையில் கை தேர்ந்தவர்கள். இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான தனுஷை கடந்த 2004இல் மணந்தார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதன் பிறகு ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய இயக்கத்தில் இறுதியாக கடந்த 2017இல் 'வேலையில்லா பட்டதாரி 2' படம் வெளியானது. இவர் கடந்த 2010இல் அஸ்வின் ராம்குமார் என்பவரை மணந்தார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 2017இல் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. சவுந்தர்யாவுக்கு வேத் என்ற மகன் உள்ளார். இவருடைய பிறந்தநாள் விழா நேற்று ரஜினிகாந்த் வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த பிறந்த நாள் விழாவில் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. 

Photo Credit - @soundaryaarajni (Twitter)Photo Credit - @soundaryaarajni (Twitter)