ads
பொங்கல் ரேஸில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன்
வேலுசாமி (Author) Published Date : Nov 24, 2018 21:36 ISTபொழுதுபோக்கு
'செக்க சிவந்த வானம்' படத்திற்கு நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மோஷன் டீஸருடன் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டைட்டில், செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சிம்பு பேசிய வசனம் என்பதால் அதையே அவரின் அடுத்த படத்திற்கும் டைட்டிலாக வைத்துள்ளனர்.
இந்த டைட்டில் சிம்புவின் தற்போதைய சூழ்நிலைக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. இதன் பிறகு விரைவில் டீசரையும் வெளியிட உள்ளனர். இதற்கான டப்பிங் பணிகளையும் சிம்பு துவங்கியுள்ளார். இந்நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வரும் பொங்கலில் நடிகர் அஜித் மற்றும் ரஜினியின் விசுவாசம் மற்றும் பேட்ட படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படமும் நுழைந்துள்ளது. இந்த படம் சிம்புவிற்கு பக்கா ரீ எண்ட்ரியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் லைக்கா ப்ரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் தற்போது மும்முரமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.