ads

சன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்

சன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்

சன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஷால் நடிப்பில் இறுதியாக 'சண்டக்கோழி 2' வெளியானது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் 'அயோக்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார்.

இவர் முன்னதாக நயன்தாரா மற்றும் அதர்வாவின் 'இமைக்கா நொடிகள்' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் ஒரு குத்தாட்ட பாடலுக்கு சன்னி லியோன் நடமாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் திரைப்படங்களில் நடிப்பதற்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டிலும் எதிர்ப்புகள் இருந்து வருகின்றது.

சன்னி லியோனின் சரித்திர படமான 'வீரமா தேவி' படத்திற்கும் தடை கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க தலைவரான விஷால், தான் நடித்து வரும் 'அயோக்யா' படத்தில் சன்னி லியோன் நடிக்க வாய்பளித்துள்ளார். 

சன்னி லியோனுக்கு வாய்ப்பளித்த நடிகர் விஷால்