சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜ்

       பதிவு : Feb 23, 2018 16:30 IST    
Super Star Rajinikanth next movie with young director Karthik Subbaraj Super Star Rajinikanth next movie with young director Karthik Subbaraj

பிட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது 'மெர்குரி' படம் உருவாகி வருகிறது. இந்த படம் மொழியே இல்லாத சைலன்ட் த்ரில்லர் படமாகும். இந்த படம் அடுத்த மார்ச் மாதம் 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்பராஜின் புது பட தகவலை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. '2.0' மற்றும் 'காலா' படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் இளம் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்துள்ளார். காலா, 2.0 படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்குவார் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் தற்போது ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்த படத்தின் மூலம் வளர்ந்து வரும் இயக்குனரான கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் 'பிட்சா'. இதற்கு முன்னதாக இவர் 15 குறும்படங்களை இயக்கி உள்ளார். இதில் இவருடைய 'காட்சி பிழை' என்ற குறும்படம் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்கு தேர்வானது.

மேலும் இவருடைய தயாரிப்பில் நிவின் பாலியின் 'அவியல்' மற்றும் நடிகர் வைபவின் 'மேயாத மான்' போன்ற படங்கள் வெளியானது. இதில் கடந்த ஆண்டு தீபாவளியில் வெளியான மேயாத மான் படத்திற்கு ரசிகர்களிடம் தற்போது வரை நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

 


சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ள கார்த்திக் சுப்பராஜ்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்