ads
கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் செலுத்தவேண்டும்
வேலுசாமி (Author) Published Date : Feb 20, 2018 18:22 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் 'கோச்சடையான்'. இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நெஷனல் மற்றும் மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் சுனில் லுல்லா, சுனந்தா முரளி ஆகியோர் தயாரித்திருந்தனர்.
இந்த படத்திற்கு இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கதை எழுதி சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். இந்த படத்தை உருவாக்குவதற்காக ரஜினிகாந்த் மனைவி லதா என்பவர் ஆட்பீரோ நிறுவனத்திடம் 14.9 கோடி கடன் வாங்கியிருந்தார். ஆனால் வாங்கிய கடனில் 8.7 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியுள்ளார்.
மீதி 6.2 கோடி திருப்பி செலுத்தாததால் ஆட்பீரோ நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் இன்று வழக்கின் விசாரணை தொடங்கபட்டது. ஆட்பீரோ நிறுவனத்தினிடம் வாங்கிய கடனை ஏன் திருப்பி செலுத்தவில்லை, இதற்கான பதிலை மதியம் 12.30 மணிக்குள் அளிக்கவேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதன் பிறகு ஆட்பீரோ நிறுவனத்திடம் ரூபாய் 6.2 கோடியை 12 வாரத்திற்குள் திருப்பி செலுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி லதா ரஜினிகாந்த் மீடியா ஒன் க்ளோபல் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் பாக்கி 6.2 கோடியை மூன்று மாதத்திற்குள் செலுத்த வேண்டும்.