ads

கார்த்தியின் தேவ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

கார்த்தியின் தேவ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

கார்த்தியின் தேவ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா

நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இந்த படத்திற்கு பிறகு கார்த்தி, தன்னுடைய 17வது படத்திற்கு அறிமுக இயக்குனரான ரஜத் ரவிசங்கருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பினை சமீபத்தில் குளு மணாலியில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வந்தனர்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. 

கார்த்தியின் தேவ் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா