ads

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா டைட்டில் லுக்கை வெளியிட்ட சூர்யா

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.

சசிகுமாரின் அடுத்த பட டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார், அசுரவதம் படத்திற்கு பிறகு இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இயக்குனர் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் 'சுந்தரபாண்டியன்' படத்தில் நடித்திருந்தார்.

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா டைட்டில் லுக்கை வெளியிட்ட சூர்யா

கடந்த 2012இல் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் சிறந்த இயக்குனர், சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த கதை உள்ளிட்ட 6 விருதுகளுக்கு தேர்வாகி மூன்று விருதுகளை வென்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர் பிரபாகரன் மற்றும் சசிகுமார் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு 'கொம்பு வச்ச சிங்கம்டா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சசிகுமார் நாயகனாக நடிக்க உள்ள இந்த படம் ஜல்லிக்கட்டு மற்றும் காளை மாட்டை மையமாக வைத்து உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா வெளியிட்டுள்ளார். குற்றம் 23, தடம் போன்ற படங்களை தயாரித்துள்ள ரதன் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இந்தர் குமார் இந்த படத்தினை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க உள்ளார்.

சசிகுமாரின் கொம்பு வச்ச சிங்கம்டா டைட்டில் லுக்கை வெளியிட்ட சூர்யா