ads

என்ஜிகே வெளியீடு தள்ளி போனதற்கு காரணம் இது தான்

நடிகர் சூர்யா என்ஜிகே படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா என்ஜிகே படத்தின் வெளியீடு தேதி மாற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குனர் செல்வராகவனுடன் முதன் முறையாக இணைந்து 'என்ஜிகே' படத்தில் நடித்து வருகிறார். அரசியல் வாதி, சமூக போராளி என வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர். டிரீம் வாரியர்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நேரத்தில் படத்தின் பணிகள் முடிக்க தாமதமாவதால் தீபாவளிக்கு வெளியிட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்த செய்தியறிந்து ரசிகர்கள் நொந்து போனார்கள். தற்போது சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மூவிபப் இணைந்து வழங்கும் குறும்பட விருது விழாவில் சூர்யா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசியபோது "உங்களுடைய நிலைமை புரிகிறது. என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது உங்களுக்கு கண்டிப்பாக வருத்தமளித்திருக்கும். தீபாவளிக்கு ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதை நினைத்து நானும் அதிக வருத்தத்துடன் தான் இருக்கிறேன்.

இந்த படத்திற்காக வரும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சமாளித்து கொண்டு தான் வருகிறோம். இந்த படம் வழக்கமான ஒன்றாக இருக்காது. அடுத்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று தான் இயக்குனர் செல்வராகவனுடன் இணைத்துள்ளேன். ஒரு நல்ல படத்தை காண நாம் பொறுமையுடன் இருக்க வேண்டும். இந்த படம் நாங்கள் நினைத்தது போல் நன்றாக வரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். இதனால் படம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோகியுள்ளது. நிச்சயம் உங்களிடம் சிறப்பான படத்தை கொண்டு வருவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ஜிகே வெளியீடு தள்ளி போனதற்கு காரணம் இது தான்