ads
உறுதியானது மீண்டும் நடிகர் சூர்யா ஹரி கூட்டணி
வேலுசாமி (Author) Published Date : Nov 02, 2018 17:40 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா நடிப்பில் என்ஜிகே மற்றும் சூர்யா 37 போன்ற படங்கள் உருவாகி வருகின்றது. இதில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்ஜிகே' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் பிறகு சூர்யா, இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் பாதுகாப்பு அதிகாரி கதாபாத்திரத்தில் 'சூர்யா 37' படத்தில் நடித்து வருகிறார்.
மோகன்லால், ஆர்யா, சயிஷா, சமுத்திரக்கனி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தினை முடித்த பிறகு 'இறுதி சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்துள்ளதாக உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சூர்யா ஹரி கூட்டணியில் வேல், சிங்கம் 1, 2, 3 என நான்கு படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. ஆனால் இந்த படம் சிங்கம் படத்தின் தொடர்ச்சி இல்லையாம். வித்தியாசமான ஆக்சன் கதைக்களத்துடன் இந்த கூட்டணி மீண்டும் களமிறங்கவுள்ளது.