ads

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நீக்கப்பட்ட காட்சி வைரல்

suriyas thaana serntha kootam deleted scene viral

suriyas thaana serntha kootam deleted scene viral

சிம்பு நடிப்பில் கடந்த 2012ல் வெளிவந்த 'போடா போடி' படத்தின் மூலம் இயக்குனராக விக்னேஷ் சிவன் அறிமுகமானார். இதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளிவந்த 'நானும் ரவ்டி தான்' படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தார். இந்த படத்தில் நாயகனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்க இவருக்கு ஜோடியாக 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடித்திருந்தார். இவர்களது கூட்டணி முதல் முறையாக இப்படத்தின் மூலம் இணைந்து ரசிகர்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளிவந்த படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த 35வது படமான இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக  நடிக்க இவர்களுடன் இணைந்து ‘நவரச நாயகன்’கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆனந்தராஜ், சுரேஷ் மேனன், மீரா மிதுன், கலையரசன், நந்தா உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர்.  

இந்த படம் தெலுங்கில் 'காங்' என்ற தலைப்பில் வெளிவந்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தினை ‘ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படம் வருமான வரித்துறையை மையமாக கொண்டு உருவாகியிருந்தது. மேலும் இப்படத்தில் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டிருந்தார். இந்த படத்தின் வரவேற்புகள் இன்றளவும் நல்ல வெற்றியை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சூர்யா மற்றும் தம்பி ராமையாவின் ஒரு காட்சி தற்பொழுது 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.       

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நீக்கப்பட்ட காட்சி வைரல்