ads

நடிகர் சுஷாந்த் சிங் உறவினரின் கோரிக்கை: தற்கொலை இல்லை, கொலை

நடிகர் சுஷாந்த் சிங்

நடிகர் சுஷாந்த் சிங்

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஜூன் 14ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆகும் இவர் திரையுலகில் மிகவும் பிரபலம், தற்கொலை செய்தியை கேட்ட திரை பிரபலங்கள் - தங்களுக்கு இது மிக பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்கள்.

கடந்த சில மாதங்களாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு எந்த ஒரு கடிதமும் கிடைக்காதலால், குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இவரது உறவினர்கள், சுஷாந்த் சிங் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இது கொலையாக இருக்க வாய்ப்பு உள்ளதால், கண்டிப்பாக விசாரணை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் உறவினரின் கோரிக்கை: தற்கொலை இல்லை, கொலை