ads

பணமதிப்பிழப்பு பாடலுக்கு சிம்பு மது பழக்கத்திற்கு எதிராக டி ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து அசத்தல்

பணமதிப்பிழப்பு பாடலுக்கு பிறகு கபிலன் வைரமுத்து தன்னுடைய மதுப்பழக்கத்திற்கு எதிரான பாடலை உருவாகியுள்ளார். இந்த பாடலை டிராஜேந்தர் பாடியுள்ளார்.

பணமதிப்பிழப்பு பாடலுக்கு பிறகு கபிலன் வைரமுத்து தன்னுடைய மதுப்பழக்கத்திற்கு எதிரான பாடலை உருவாகியுள்ளார். இந்த பாடலை டிராஜேந்தர் பாடியுள்ளார்.

அனேகன், கவண், விவேகம் போன்ற படங்களுக்கு பாடல் வரிகளை அமைத்துள்ள பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளரான கபிலன் வைரமுத்து, தற்போது தமிழக மக்களை புலம்பவிட்டு வரும் மதுப்பழக்கத்திற்கு எதிராக புதிய பாடல் ஒன்றை தன்னுடைய பாடல் வரிகளில் உருவாக்கியுள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டில் பணமதிப்பிழப்புக்கு எதிராக கபிலன் வைரமுத்து தன்னுடைய வரிகளில் உருவான பாடலை நடிகர் சிலம்பரசனை பாட வைத்திருந்தார்.

இசைஅமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதன் பிறகு தற்போது எழுத்தாளர் கபிலன் வைரமுத்து மது பழக்கத்திற்கு எதிராக புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த பாடலுக்கும் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு தான் இசையமைக்கிறார். இந்த பாடலை நடிகர் மற்றும் அரசியல்வாதியான டி ராஜேந்தர் பாடியுள்ளார்.

ஏற்கனவே இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைப்பில் டி ராஜேந்தர், கவண் படத்தில் பாடியுள்ளார். கவண் படத்தில் மூன்று பாடலுக்கு பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பாடலை வரிகளை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி மது பழக்கத்திற்கு எதிரான பாடலில் கை கோர்த்துள்ளது. மேலும் தற்போது சிம்புவிற்கு பிறகு அவரது தந்தையான டி ராஜேந்திரை மது பழக்கத்திற்கு எதிரான பாடலுக்கு பாட வைத்துள்ளார் எழுத்தாளர் கபிலன் வைரமுத்து. இந்த பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பினை விரைவில் வெளியிட உள்ளனர்.

கவண் படத்திற்கு பிறகு மீண்டும் பாலமுரளி பாலு இசையமைப்பில் டி ராஜேந்தர் பாடியுள்ளார்.கவண் படத்திற்கு பிறகு மீண்டும் பாலமுரளி பாலு இசையமைப்பில் டி ராஜேந்தர் பாடியுள்ளார்.

பணமதிப்பிழப்பு பாடலுக்கு சிம்பு மது பழக்கத்திற்கு எதிராக டி ராஜேந்தர் - கபிலன் வைரமுத்து அசத்தல்