ads
சுந்தர் சி இயக்கத்தில் மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ள தமன்னா
ராசு (Author) Published Date : Sep 08, 2018 15:25 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் பிரபல இயக்குனரான சுந்தர் சி, 'கலகலப்பு 2' படத்திற்கு பிறகு நடிகர் சிம்புவை வைத்து பவன் கல்யாணின் 'அட்டாரின்டிகி தரெடி' என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஷாலை வைத்து புதிய ஆக்சன் படத்தை உருவாக்க உள்ளார். ஏற்கனவே சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணியில் ஆம்பள மற்றும் மதகஜராஜா போன்ற படங்கள் உருவாகியுள்ளது.
இதில் மதகஜராஜா படம் எதிர்பாராத காரணங்களால் தாமதமாகி கொண்டே செல்கிறது. இந்த படங்களுக்கு பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக விஷால், சுந்தர் சி கூட்டணி இணைந்துள்ளது. இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே விஷாலுடன் இணைந்து 'கத்தி சண்டை' படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருந்தார். இதன் பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க விஷாலுடன் ஜோடி சேர்ந்துள்ளார்
. இந்த படம் குறித்து தமன்னா கூறுகையில் 'சுந்தர் சி இயக்கத்தில் நடிப்பது உண்மை தான். நான் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. தற்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது. மீண்டும் விஷாலுடன் இரண்டாவது முறையாக நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக நான் ஆவலுடன் இருக்கிறேன். இது ஒரு ஆக்சன் படம். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் ஆக்சன் சார்ந்ததாக இருக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.