தமிழ் மற்றும் தெலுங்கின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான நாள் இன்று

       பதிவு : Oct 31, 2017 18:02 IST    
தமிழ் மற்றும் தெலுங்கின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான நாள் இன்று

இன்றைய தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளிவருகின்றன. ஆண்டிற்கு 100 கும் மேல் படங்கள் வெளிவருகிறது. தமிழகத்தில் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' படம் வெளியான நாள் இன்று. இந்த படம் 1931-ஆம் வருடம் அக்டோபர் 31 சனிக்கிழமை வெளியானது. இந்த படத்தை ஹச்.எம்.ரெட்டி இயக்கி இம்பெரியல் மூவி டோன் தயாரித்துள்ளனர். இந்த படத்தில் டீ.பி.ராஜலட்சுமி, பி.ஜி.வெங்கடேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

உயர்ந்த கீர்த்தனைகள், தெளிவான பாடல்கள், கொறத்தி நாடகங்கள் போன்ற காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தின் பாடல் வரிகளை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். இந்த படத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தின் மூலம் தமிழ் படத்தின் பாடலாசிரியர் எனும் பெருமையை பாஸ்கரதாஸ் பெற்றார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் முதல் பேசும் படமாகும். இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆழம் ஆரா' தயாரித்த திரையரங்கிலேயே 'காளிதாஸ்' படமும் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நடிப்பு மற்றும் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தங்களின் பாட்டு வரிகளையே நடித்து காட்டுவார்கள் அன்றைய சினிமா துறையினர். மேலும் அன்றைய காலகட்டங்களில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு ஆனால் இன்றைய காலகட்டங்களில் சினிமாதான் நமக்கு வாழ்க்கையாகிவிட்டது. சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளின் வாழ்க்கை வரலாறு முழுவதும் தெரிந்த இன்றைய சமூகத்தினர் நம் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறுகளை சற்றும் சிந்தித்து பார்க்க இயலாதது வேதனை அளிக்கிறது.


தமிழ் மற்றும் தெலுங்கின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளியான நாள் இன்று


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்