ads
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியானது
புருசோத்தமன் (Author) Published Date : Mar 16, 2019 17:05 ISTபொழுதுபோக்கு
நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் பெரிய வெற்றி படமாக அமையவில்லை என்றாலும் இளைஞர்களுக்கு பிடிக்கும் அளவிற்கு கதைக்களம் அமைந்துள்ளது. கதாநாயகன் ஹரிஷ் கல்யாண், தன் சிறுவயத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தினால் தனது காதல் வாழ்க்கைக்கு ஏற்படும் பிரச்சனைகளை மற்றும் அதன் முடிவுகளே கதை.
ஹரிஷ் கல்யாண் மற்றும் கதாநாயகி ஷில்பா இருவரின் நடிப்பு மிக பாராட்டும் அளவிற்கு இருந்தது. இவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள், குழப்பமான சூழ்நிலைகள் போன்ற காட்சிகள் நன்றாகவே அமைந்து இருந்தது. இந்த வகை காதல் கதை ஏற்கனவே நாம் பார்த்திருந்தாலும், புது முயற்சியில் இருப்பதால் ஒருமுறை பார்க்கலாம்.
படத்தின் திருட்டு பதிவை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. படம் சுமாராக இருக்கிறது என்று விமர்ச்சகர்கள் கூறும்போது, இவ்வகை திருட்டு பதிவுகள் இணையத்தில் வெளியாவதால் படத்தை திரையரங்குகளில் மக்கள் பார்ப்பது குறைகின்றது. இது தயாரிப்பாளர்களுக்கும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.