ads
நேரடியாக தமிழில் அறிமுமாகவுள்ள அல்லு அர்ஜுனின் புதுப்பட தலைப்பு
வேலுசாமி (Author) Published Date : Mar 18, 2018 18:29 ISTபொழுதுபோக்கு
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன். நடிகர் மற்றும் டான்சரான இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரின் படங்கள் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் டப் செய்யப்படுவதால் இவருக்கு பல மொழிகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழில் இவருடைய யேவடு, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, ருத்தரமாதேவி போன்ற படங்கள் டப் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பிறந்த இவர் தற்போது நேரடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இவர் நடிக்கும் "நா பேரு சூர்யா நா இலு இண்டியா" என்ற தெலுங்கு படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தயாராகி வருகிறது. இந்த படத்தை வெக்கந்தம் வம்சி இயக்குகிறார். நாயகனான அல்லு அர்ஜுனுடன் அனு இம்மானுவேல், அர்ஜுன், சரத்குமார், தாக்கூர் அனுப் சிங், நதியா, ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், விஷால், சேகர் இசையமைக்கின்றனர். இந்த படத்தை ராஜலட்சுமி சினி கிரியேஷன் தயாரிக்கிறது. தேசப்பற்று படமான இதில் அல்லு அர்ஜூன் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இந்த படம் "என் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா" என்று தலைப்பு வைத்துள்ளனர். தமிழில் உருவாகும் இந்த படத்தின் வசனம் மற்றும் பாடல்களை இயக்குனர் பா.விஜய் எழுதுகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.