ads

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா டைட்டில் டிராக் வீடியோ

thaana serntha kootam peela peela video song title track video released

thaana serntha kootam peela peela video song title track video released

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் கடந்த பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரியாக சூர்யா களமிறங்கியுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் டீசர், இசை, வீடியோ போன்றவை படக்குழு வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்க செய்தது.

இந்த படத்தில் அனிருத் இசையில் வெளிவந்த சொடக்கு, நானா தானா, பீலா பீலா போன்ற பாடல்கள் ரசிகர்களின் ரிங் டோனாக தற்போது மாறியுள்ளது. அனிருத்தின் இசை இந்த படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. பின்னர் இந்த படத்தில் இடம் பெற்ற சொடக்கு மேல சொடக்கு போடுது மற்றும் நானா தானா போன்ற வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பீலா பீலா என தொடங்கும் பாடலையும் இந்த படத்தின் டைட்டில் டிராக் விடீயோவையும் படக்குழு இன்று மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் மற்றும் டைட்டில் டிராக் வீடியோ போன்றவை வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் 35 வது படமாக உருவான இந்த படத்தை ஆட்னா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிறீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கேஇ ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 36 படத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்துள்ளார். மேலும் சூர்யா 37 படத்தை இயக்குனர் கேவி ஆனந்தும் சூர்யா 38 படத்தை இயக்குனர் விக்ரம் குமாரும், சூர்யா 39 படத்தை இயக்குனர் ஹரியும் இயக்க உள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பீலா பீலா டைட்டில் டிராக் வீடியோ