ads
இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் அடுத்த பட படப்பிடிப்பு
வேலுசாமி (Author) Published Date : Oct 29, 2018 18:44 ISTபொழுதுபோக்கு
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'விசுவாசம்'. வரும் பொங்கலுக்கு இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ஆக்சன், வசன காட்சிகள் நிறைவடைந்துள்ளது. இதன் பிறகு தற்போது பாடல் காட்சிகளை படமாக்க மும்பையில் படக்குழு களமிறங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக புனேவிலும் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளனர். இதனால் தற்போது பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த படத்தினை முடித்த பிறகு அஜித், அடுத்ததாக 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் கடந்த 2016ஆம் ஆண்டில் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. தற்போது அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வரும் 'விசுவாசம்' படத்தின் வெளியீட்டிற்கு பிறகு அடுத்த ஆண்டில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பினை துவங்கவுள்ளனர்.