ads

வெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்

வெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்

வெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்

வீரம், வேதாளம், விவேகம் போன்ற படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் 'விசுவாசம்'. இந்த படம் வெளியாவதற்கு இன்னும் சரியாக 50 நாட்களே உள்ளது. கிராமத்து கெட்டப்பில் அஜித்தின் இரட்டை வேடத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர். \

முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் அண்ணன் தம்பியான அஜித்தின் கெட்டப்புகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படத்தின் டீசரும்வெளியாகவுள்ளது . சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் டி இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தினை பொங்கலுக்கு காண ரசிகர்கள் இப்போதோ ஏக்கத்துடன் உள்ளனர். 

வெளியானது நடிகர் அஜித்தின் விசுவாசம் மோஷன் போஸ்டர்