ads

வெளியானது விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்

வெளியானது விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்

தல அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி வரும் 'விசுவாசம்'. இந்த படத்தில் அண்ணன் தம்பி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடித்து வருகிறார். வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னதாக படக்குழு வெளியிட்டது.

இதன் பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாவது செகண்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. புல்லட்டில் ஹெல்மட்டுடன் தம்பி அஜித்தின் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து வரும் தீபாவளியில் இந்த படத்தின் டீசர் அல்லது ட்ரைலருக்காக ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் முழு படப்பிடிப்பையும் இன்னும் இரண்டு வாரங்களில் முடிக்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் காமெடி நடிகர்களாக யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வெளியானது விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டர்