தம்பி ராமையா மீண்டும் இயக்குனராகிறார்

       பதிவு : Nov 01, 2017 16:08 IST    
தம்பி ராமையா மீண்டும் இயக்குனராகிறார்

சில முன்னணி நடிகர்களோடு காமெடி கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையா, முரளியின் மனு நீதி, வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி முதல் முதலில் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்புகள் கிடைக்காததால், அடுத்த படம் தம்பி ராமையா தயாரித்து இயக்கும் 'உலகம் விலைக்கு வருது' படத்தில் உமாபதி நடித்துவருகிறார். 

இந்த படத்தின் மூலம் மகனை திரையுலகில் நிலைநிறுத்த விரும்பும் பட்சத்தில் படம் முழுக்க காமெடிகள் நிறைந்து எடுக்கபட்டுவரும்  இப்படத்தில் மிருதுளா முரளி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, சீனி மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

 

தேன்மொழி சுங்குரா தயாரிக்கும் இப்படத்தில் முதல் படப்பிடிப்பு பாடல் காட்சிகள் புதுக்கோட்டையில் தொடங்கியிருப்பதாகவும், தமிழர்களின் பாரம்பரிய கலைகளின்  முக்கியதுவத்தினை உணர்த்தும் தப்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமிய ஆட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர். 


தம்பி ராமையா மீண்டும் இயக்குனராகிறார்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்