ads

வெளியானது தி நன் பேய் படத்தின் 360 டிகிரி வீடியோ

அடுத்த மாதம் வெளியாக உள்ள தி நன் படத்தின் 360 டிகிரி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த மாதம் வெளியாக உள்ள தி நன் படத்தின் 360 டிகிரி வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

உலகமே நவீன மையமாகி வருகிறது. இந்த நவீனம் சினிமா உலகிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முன்னதாக தியேட்டர் மற்றும் தொலைக்காட்சிகளில் படங்களை கண்டு பொழுதை கழித்த மக்கள் படிப்படியாக மாறி லேப்டாப், ஸ்மார்ட்போன்களிலே புது படங்களை காண்கின்றனர். இது தற்போது மேலும் நவீனமடைந்து வார்ட்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) என்ற நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளது.

360 டிகிரி விடியோவை வார்ட்சுவல் ரியாலிட்டி கருவிகளில் காணும் போது படத்திற்குள்ளே நாம் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் தற்போது 360 டிகிரி வீடியோ காட்சிகள் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகின்றன. படங்கள், விளையாட்டுக்கள் போன்றவை 360 டிகிரி வீடியோவில் வெளியீட்டு ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தந்து வருகின்றனர்.

இந்த அனுபவம் சாதாரண படங்களை விட பேய் படங்களில் கூடுதல் அதிர்ச்சியான அனுபவத்தை கொடுக்கின்றனது. ஆனால் இந்த பேய் படங்களை 360 டிகிரி விடியோவாக காண்பதை பெரும்பாலானோர் பயத்தால் தவிர்த்து வந்தாலும் சாகசத்திற்காக ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களுக்காக வரும் செப்டம்பர் 6இல் வெளியாகவுள்ள தி நன் (The Nun) பேய் படத்தின் 360 டிகிரி வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண விடீயோவிலே நன் (NUN) பேயை கண்டு பயந்தவர்கள், 360டிகிரி விடியோவை பார்த்தால் என்ன ஆவார்களோ..

வெளியானது தி நன் பேய் படத்தின் 360 டிகிரி வீடியோ