ads
இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது
வேலுசாமி (Author) Published Date : Jan 26, 2018 11:18 ISTபொழுதுபோக்கு
பத்ம விபூஷன் விருது நமது இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது ஆகும். இந்த விருதுகளை பெரும் கலைஞர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதானது முதன் முதலில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி இந்திய குடியரசு தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த விருது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2012-ஆம் ஆண்டு வரை இந்த விருதுகள் 288 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2012-ஆம் ஆண்டு மட்டும் 5 நபருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது இசைஞானி இளையராஜாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு பத்ம பூசன் விருதை பெற்றுள்ளார். இன்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விருது அளிக்கப்பட்டது குறித்து இளையராஜா கூறும்போது "என்னை மத்திய அரசு கவுரவ படுத்தியதாக கருதவில்லை.
தமிழக மக்களையும், தமிழகத்தையும் பெருமை படுத்தியதாக கருதுகிறேன்." என்று தெரிவித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அடுத்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை இசைஞானி இளையராஜா பெறுகிறார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.