அதிரடி த்ரில்லரில் கலக்கும் த்ரிஷா

       பதிவு : Nov 02, 2017 10:23 IST    
அதிரடி த்ரில்லரில் கலக்கும் த்ரிஷா

த்ரிஷா மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்பொழுது அதிரடி த்ரில்லர் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்து வரும் த்ரில்லர் படமான மோகினி, சதுரங்க வேட்டை 2 படங்களோடு சுந்தர் பாலு இயக்கத்தில் கர்ஜனை படத்திலும், 1818, ஹேய் ஜுடே, 96 போன்ற படங்களிலும் நடித்துவருகிறார்.      

2015ல்  நவதீப் சிங்க் இயக்கத்தில் வெளிவந்த NH10 ஹிந்தி படத்திற்கு அதிகளவு வரவிப்புகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தினை மையமாக வைத்து கர்ஜனை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் மையக்கருத்து ''காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்து'' அதன் பிறகு அந்த பெண்ணின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகிறது.

 

“ஒரு பெண்ணுக்கு ஏற்படும் கோபம், எப்படி பழிவாங்கும் உணர்ச்சியாக மாறுகிறது என்பதை மையமாக வைத்து, படத்தை இயக்கியுள்ள சுந்தர் பாலு ‘பாகுபலி’ படம் போன்று தோற்றத்தில் இருக்கும் என்று கூறியுள்ளார். இப்படத்தில் அமீட் பார்கவ், வம்சி கிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு வடிவுக்கரசி, மதுமிதா, ஸ்ரீரஞ்சனி, தவசி, சுவாமிநாதன், ஆர்யன் மற்றும் சிலர் நடித்துள்ளனர்.    
     
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு  நடிகர் கார்த்தி தலைமையில் வெளியிடப்பட்டு,  ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது.

.   

 

    


அதிரடி த்ரில்லரில் கலக்கும் த்ரிஷா


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்