ads

29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்

திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணி அவர்களின் பார்வையில் தயாரிப்பாளர் சங்க போராட்டம்

திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணி அவர்களின் பார்வையில் தயாரிப்பாளர் சங்க போராட்டம்

தற்போது தமிழ் சினிமா துறையை, தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டங்கள் முடக்கியுள்ளது. கியூப் (QUBE) போன்ற டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை கையில் எடுத்தது. இந்த வேலை நிறுத்தத்தால் திரைக்கு வெளிவர தயாராக இருந்த ஏராளமான படங்கள் வெளியாகாமல் திரையரங்குகளில் வெறிசோடி காணப்பட்டது.

இதனை அடுத்து வரும் மார்ச் 16-ஆம் தேதி (இன்று) முதல் சினிமா படப்பிடிப்புகள், டீசர், இசை போன்ற எந்த நிகழ்ச்சிகளும் நடக்காது எனவும் அறிவித்தது. தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் வெளியாகாமல் தியேட்டர்களுக்கு 15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திரையரங்கு உரிமையாளர்களும் 8 சதவீத கேளிக்கை வரியை நீக்க கோரியும், ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கும் திரையரங்கு உரிமையை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வலியுறுத்தியும் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் எனவும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது திரையரங்கு உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தில் சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொள்ள போவதில்லை.

இதனால் வழக்கம் போல் சென்னையில் 147 திரையரங்குகளும் செயல்படும் என்று நேற்று சென்னையில் நடந்த மாநகர அவசர கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இந்த போராட்டங்களில் நீடிக்கும் குழப்பத்தால் புதிய படங்கள் வெளியாகாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்களின் போராட்டம் தொடர்பாக திருப்பூர் சுப்பிரமணி அவர்கள் ஒரு ஆடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவர் சுமார் 29 வருடங்களாக தியேட்டர் உரிமையாளராக சிறப்பான முறையில் செயல்பட்டு வந்துள்ளார். இவரிடம் சுமார் 40 திரையரங்கிற்கு மேல் கோயம்பத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மட்டும் இதர சுற்றுப்புற திரையரங்குகளின் உரிமையாளர்களுடன் இணைந்து திரைப்படங்களை திரையிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் பிரச்சனையை அவரின் 29 வருட அனுபவ  கண்ணோட்டத்தில் விளக்கியுள்ளார்.

அதில்  அவர் "தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களின் கோரிக்கை நியாயமான கோரிக்கை. அதனை நான் மதிக்கிறேன். ஆனால் ஒரு படம் வெளியாவதில் 2-3 சதவீதம் வரை செலுத்தும் டிஜிட்டல் சேவை கட்டணம் மட்டும் தான் பிரச்சனையாக இருக்கிறதா?. ஒரு படம் எடுப்பதில் கிட்டத்தட்ட 70 சதவீதம் வரை நடிகர் நடிகைகளுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் செலவாகிறது.

அதை ஏன் பேச மறுக்கிறீர்கள். முன்னதாக 5 லட்சம் 10 லட்சம் சம்பளம் பெற்ற முன்னணி நடிகர்கள் 10, 20,30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். இதற்கு ஒரு தயாரிப்பாளர் வட்டிக்கு கடன் வாங்கி அவர்களுக்கு தர வேண்டியுள்ளது. அதை ஏன் பேச மாறுகிறீர்கள். முன்னதாக 50, 100 படங்களுக்கு மேல் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் குட் பிலிம்ஸ், ஏவிஎம் போன்றவை ஏன் ஒதுங்கி இருக்கிறார்கள். பணம் இல்லாமலா? நடிகர்கள் மட்டும் இயக்குனர்கள் வாங்கும் சமபளத்தினால் தான்.

அதை ஏன் பேச மறுக்கிறீர்கள். முன்பு 4-5 பிரிண்ட் மட்டும் செய்த படங்கள் 5 வருடங்களில் என்ன வசூல் செய்தது, தற்போது டிஜிட்டல் சேவை வந்ததால் ஒரு வாரம் இரண்டு வாரம் ஓடும் படங்கள் 50 கோடி வசூல், 100 கோடி வசூல் படம் வெற்றி ஆகுதோ இல்லையோ, மாபெரும் வெற்றி, தரமான வெற்றி என்று அறிவிக்கின்றனர். இப்படி கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை சதவீத அடிப்படையில் சம்பளம் வாங்க சொல்லுங்க.

இப்படி செய்தால் நம்ம தொழிலும் நன்றாக இருக்கும், நாமும் நன்றாக வாழலாம்." என்று அவர் தெரிவித்துள்ளார். ஒரு படம் எடுப்பதில், வெற்றி பெறுவதில் நடிகர் மற்றும் இயக்குனரின் பங்கு முக்கியமானது என்று பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு படத்தில் தயாரிப்பாளர் எவ்வளவு பிரச்சனையை சந்திக்கிறார், அந்த படத்தை வெளியிட படக்குழுவினர் எவ்வளவு சிரம படுகிறார்கள், திரையரங்கிற்கு ஒரு படம் எப்படி வருகிறது என்பதில் மக்களுக்கு கவலை இல்லை.

ஒரு ரசிகனாக ஒரு நடிகரின் படமாக மக்கள் கருதுகின்றனர். தற்போது நிலவி வரும் தயாரிப்பாளர் பிரச்சனையாலும், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டங்களாலும் வெளிவர உள்ள புது படங்களும், உருவாகி வரும் புதுப்படங்களில் படப்பிடிப்புகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. அவர் பேசிய விவரங்களின் முழு தகவல்கள் சார்ந்த ஆடியோவை கீழே இணைந்துள்ளோம்.

29 வருட அனுபவ பார்வையில் திரையரங்கு உரிமையாளரின் தயாரிப்பாளர் சங்க போராட்டம்