ads

இது கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை

பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்திற்கு பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தன்னுடைய உடல்நலம் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின்னர் உடல்நலம் தேறிய பிறகு 49ஒ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்

பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்திற்கு பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தன்னுடைய உடல்நலம் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின்னர் உடல்நலம் தேறிய பிறகு 49ஒ படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆனார்

இன்று கவுண்டர் நாயகன் கவுண்டமணியின் 79வது பிறந்த நாள். சுப்ரமணி கருப்பையா என்ற நிஜ பெயர் கொண்ட கவுண்டமணி உடுமலை பேட்டையில் பிறந்தவர். இவர் தன்னுடைய நாடக பின்னணியின் மூலமாக திரைத்துறைக்கு நுழைந்தார். தன்னுடைய அசாத்தியமான பேச்சு திறமையால் நமக்கு முன்னால் பேசுபவரை திணறடிக்கும் இவரை உள்ளூரில் கவுண்டர்-மணி என்று அழைத்து வந்தனர். பிறகு நாளடைவில் கவுண்டர்-மணி என்பது கவுண்டமணி என்று மாறி போனது.

இவருடைய முதல் 1964இல் வெளியான சர்வர் சுந்தரம். ஆரம்பத்தில்சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரது படங்களில்  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் படிப்படியாக முன்னேறி தற்போது அசாத்தியமான கவுண்டர் திறமையால் காலத்தால் அழியாத புகழ்பெற்று விளங்குகிறார். இவர் திரைத்துறைக்கு 1964இல் அறிமுகமாகி தற்போது வரை கிட்டத்தட்ட 54 வருடங்களாக ஹீரோ, வில்லன், மாமன், மச்சான், அண்ணன், தம்பி போன்ற ஏராளமான கதாபத்திரங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ள இவர் 300 படங்கள் வரை நடித்துள்ளார்.

தன்னுடைய படங்களில் துணை கதாபாத்திரமாகவும், காமெடி நடிகராகவும் தனியாக நடித்து வந்த இவர் நடிகர் செந்திலுடன் இணைந்து 200 படங்கள் வரை நடித்துள்ளார். இவர்கள் இருவரது காமெடிகளும், கவுண்டமணியின் கவுண்டர் வசனமும் தற்போதைய நெட்டிசன்களுக்கு வரப்பிரசாதம். இருவரும் இணைந்து நடித்த 'கரகாட்டக்காரன்' படம் இவர்களது 100வது படமாகும். இவர்களது காமெடி காட்சிகள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. இந்த படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு 425 நாட்கள் வெற்றிகரகமாக ஓடி சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் 1980-2000 காலங்களில் காமெடிகளுள் சிறந்த விளங்கிய இவர்களை 'தமிழ் சினிமாவின் லாரல் ஹார்டி' என்று அழைத்தனர். நடிகர் செந்திலை போன்று நடிகர் சத்யராஜ், பிரபு, விஜயகாந்த், கார்த்தி ஆகியோரின் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார். இதில் சத்யராஜ்- கவுண்டமணி வலுவானதாக அமைந்தது. இருவரும் இணைந்து 36 படங்கள் நடித்துள்ளனர். இவர்களுடைய காமெடி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போதும் ரசிகர்களிடம் நல்ல பிரபலமாகி வருகிறது.

பொள்ளாச்சி மாப்பிள்ளை படத்திற்கு பிறகு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், தன்னுடைய உடல்நலம் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். பின்னர் உடல்நலம் தேறிய பிறகு '49ஓ' மற்றும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்கள் மூலம் ரீ என்ட்ரி ஆனார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெற வில்லை. ஆனாலும் தங்களது பழைய கவுண்டர் மணியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

இது கவுண்டர் மணி கவுண்டமணி ஆன கதை