ads

தல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்

தல பிறந்த நாளான இன்று அவருடைய ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தல பிறந்த நாளான இன்று அவருடைய ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று தென்னிந்திய நடிகரான தல அஜித்தின் 47வது பிறந்த  நாள். இன்றைய நாளில் அவருடைய இனிமையான வாழ்க்கையை தெரிந்து கொள்வோம். ரசிகர்களால் 'அல்டிமேட் ஸ்டார்' மற்றும் 'தல' என்று அழைக்கப்படும் அஜித், நடிகராக மட்டுமல்லாமல் கார் மற்றும் பைக் போடுவதிலும் கை தேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஐதராபாத்தில் பிறந்த இவருக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது. இவருடைய முதல் தமிழ் அறிமுக படமான அமராவதி, பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்று அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தமிழை படிப்படியாக கற்று தேர்ந்தார்.

இவர் தமிழுக்கு அறிமுகவாதற்கு முன்பு தெலுங்கில் 1993இல் வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படத்திற்கு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். தமிழில் குழந்தை நட்சத்திரமாகவும் 1990இல் வெளியான 'என் வீடு என் கணவர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமான பிறகு தொடர்ந்து காதல் கோட்டை, காதல் மன்னன், உல்லாசம், அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், நீ வருவாய் என, தீனா சிட்டிசன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.

இதில் இவருடைய 25வது படமான அமர்க்களம் படத்தில் ஷாலினியுடன் இணைந்து நடித்ததன் மூலம் அவருடன் காதல் கொண்டு 2000இல் அவரை மணமுடித்தார். தற்போது இவருக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு 2003-05 போன்ற வருடங்களில் மோட்டார் பந்தயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்ததனால் இவருக்கு வந்த சாமி, காக்க காக்க, கஜினி போன்ற பட வாய்ப்புகளை தவிர்த்தார். அந்த காலகட்டத்தில் இவருடைய நடிப்பில் வெளியான படங்களில் சில படங்கள் தோல்வி அடைந்தது.

இதில் 2004இல் இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான 'அட்டகாசம்' படம் அதிரடி நாயகன் என்ற தகுதியை உயர்த்தியது. மேலும் இந்த படத்தின் 'தல தீபாவளி' பாடல் 'தல' என்ற பட்டத்திற்கு முக்கிய காரணமாக இருந்தது. முன்னதாக வருடத்திற்கு இரண்டு மூன்று படங்கள் வெளிவரும் ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது தல அஜித்தின் 58வது படமான 'விசுவாசம்' இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது.

மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான அஜித் தற்போது வரை பூவெல்லாம் உன்வாசம், வாலி, சிட்டிசன், வரலாறு, வில்லன், பில்லா, ஏகன், அசல், ஆரம்பம், மங்காத்தா போன்ற படங்களுக்காக விஜய் விருதுகளின் 5 விருப்பமான நாயகன் விருதுகளையும், 3 பிலிம் பேர் விருதுகள்,  தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான 2 விருதுகளையும் வென்றுள்ளார். இது தவிர சினிமா எக்ஸ்பிரஸ், சென்னை டைம்ஸ் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

தமிழ் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் இருந்து படிப்படியாக தன்னுடைய விடாமுயற்சியினாலும், தன்னம்பிக்கையினாலும் உயர்ந்து தற்போது முன்னணி நடிகராக வளம் வருகிறார் அஜித். தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் தல தற்போது ரசிகர்களின் கோரிக்கைக்கேற்ப வருடத்திற்கு ஒரு படங்களாவது ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். இளம் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தல அஜித்துக்கு தமிழகம் முழுவதுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சினிமா துறையிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவருடைய 47வது பிறந்த நாளான இன்று, இவருக்கு ஏராளமான ரசிகர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மே 1 அஜித் பிறந்த நாளில் அவருடைய ரசிகர்கள் சில சமூக சேவைகளையும் செய்து வருகின்றனர். இவருடைய பிறந்த நாளுக்கு பல திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதில் இவருடைய தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் நேற்று இரவு 11:42 மணிக்கெல்லாம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பேஸ்புக், ட்வீட்டர் போன்ற எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாத தல அஜித்துக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவருடைய பிறந்த நாளுக்கு ஊடகங்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தல பிறந்த நாளில் முதலில் வாழ்த்து தெரிவித்த தலயின் தீவிர ரசிகர்