ads
விஜய் 62 ட்விட்டரில் ட்ரெண்ட்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 06, 2017 09:40 ISTபொழுதுபோக்கு
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கத்தி, துப்பாக்கி படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யின் 62வது படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த செய்தி வெளிவந்ததில் இருந்து விஜய் ரசிகர்கள் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றனர். இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படாத நிலையில் அதிகார பூர்வ அறிவிப்பில் டைட்டில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் நடிப்பதற்கான நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இதற்கு இடையில் ஏஆர். முருகதாஸ் 4 ஆஸ்கர் விருதினை பெற்ற ஹாலிவுட் படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஆனால் இந்த தகவலை குறித்து இயக்குனர் ஏஆர். முருகதாஸ் தரப்பில் இருந்து எந்த வித தகவலும் இது வரை வரவில்லை. நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்யின் 62வது படத்தில் ஏஆர்.ரகுமான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் கலை இயக்குனராக டி.சந்தானம், ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டிங் பணியில் ஸ்ரீகர் பிரசாத் ஈடுபட உள்ளனர். இவர் எடிட்டிங் பணிக்காக எட்டு முறை தேசிய விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.