ads
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி
வேலுசாமி (Author) Published Date : Jan 31, 2018 14:15 ISTபொழுதுபோக்கு
உலகில் தமிழ், கிரீக், லத்தீன், ஹெபிரயூ, பெர்சியன், சீன மொழி, சமஸ்கிருதம் போன்ற 7 பழம்பெரும் மொழிகள் உள்ளது. இந்த 7 மொழிகளில் தமிழ் மொழியை தவிர 6 மொழிகளுக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளது. தற்போது தமிழ் இருக்கை அமைய உள்ளது. அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு 40 கோடி செலவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தமிழக அரசு சார்பில் தனது பங்களிப்பாக 10 கோடி நிதியுதவி அளித்தது. இதனை தொடர்ந்து இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், சூர்யா, விஷால், முத்துக்குமார், கமல்ஹாசன் மற்றும் உலகின் பல்வேறு இடங்களில் உள்ள தமிழர்கள் தங்களது பங்களிப்பாக அவர்களது நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இதில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது பங்களிப்பை அளித்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது கவிஞர் வைரமுத்து 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். இதனை அடுத்து பேசிய கவிஞர் வைரமுத்து "ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ஏழை கவிஞன் என்பதால் 5 லட்சம் அளித்துள்ளேன். தமிழ் மொழியால் ஹார்ட்வார்ட் கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. மிகவும் தாமதமாக அனைத்து தகுதியும் உள்ள தமிழ் மொழியை ஹார்வர்ட் கழகத்திற்கு கொண்டு சேர்த்துள்ளோம். தாய் மொழி தமிழ் சீன மொழிக்கு இணையானது. தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த மன்மோகன்சிங் மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு நன்றி." என்று தெரிவித்துள்ளார்.