5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து

       பதிவு : Nov 27, 2017 21:31 IST    
manirathnam new movie composing manirathnam new movie composing

இயக்குனர் மணிரத்னம் 'காற்று வெளியிடை' படத்திற்கு பிறகு தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராஜேஷ், பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்கள் இணையவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படப்பிடிப்பிற்கு ரசிகர்கள் மற்றும் இந்த படத்தில் இணையும் நட்சத்திரங்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். 

இந்நிலையில் இந்த படத்தின் காம்போசிங்கிற்காக வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கோவாவில் இருந்து 4 மணி நேரம் பயணித்து மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றை அடைந்தனர். இது இந்தியாவின் மேற்கு எல்லையாகும். இந்த மலைஉச்சியில் தங்கியிருந்த மாளிகையில் 5 நாட்கள் தங்கியிருந்தனர். அங்கிருந்து பார்த்தால் சுமார் 20 கி.மீ ஆள் நடமாட்டமே இருக்காது. இங்கு இருந்த 5 நாட்களில் 6 பாடல்களை எழுதி முடித்துவிட்டார் கவிஞர் வைரமுத்து. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்குகிறது. 

 


5 நாளில் 6 பாடல்களை எழுதி முடித்த கவிஞர் வைரமுத்து


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்