ads

சிம்பு படத்தில் விஜய் சேதுபதி போலீஸ்

vijay sethupathi in simbu movie

vijay sethupathi in simbu movie

 இயக்குனர் மணிரத்னம் புது படத்தினை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, அரவிந் சாமி, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படம் ஜோதிகா, விஜய் சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா உள்பட பலருக்கு முதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், சிம்பு, பகத்பாசில் மற்றும் அரவிந் சாமி ஆகிய மூவருக்கும் அப்பாவாக நடிக்கிறார். குடும்ப தலைவியாக ஜெயசுதா நடிக்கிறார். 

'சேதுபதி' படத்தை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ப்ரீப்ரொடக்சன் வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பை படக்குழு இன்னும் தேர்வு செய்யவில்லை. விரைவில் மணிரத்னம் ரசிகர்களுக்கு இதற்கான அறிவிப்பை தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு படத்தில் விஜய் சேதுபதி போலீஸ்