ads

வித்தியாசமான தோற்றத்தில் மக்கள் செல்வனின் எடக்கு ட்ரைலர்

edakku movie stills

edakku movie stills

தமிழ் திரைப்பட ரசிகர்களின் தற்பொழுது நம்பிக்கை நாயகனாக சிறந்து விளங்கும் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதி தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மலையத்தில் 6 வருடங்களுக்கு முன்பு 'அகாடா' படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருந்த விஜய் சேதுபதியின் படத்தினை தற்பொழுது தமிழில் எடக்கு என்ற பெயரில் எடுத்து வருகின்றனர்.

இந்த படத்தில் நேரடியாக விஜய் சேதுபதி ஹீரோ கெட்டப்பில் களமிறக்கியுள்ளார். தற்பொழுது   தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதி முன்னணி நடிகராக சிறந்து விளங்கும் காரணத்தினால்  நேரடியாக நடிக்கவுள்ளார். 'அகாடா' மலையாள படத்தினை இயக்கிய எஸ்.சிவன் 'எடக்கு' படத்தினையும் இயக்கவுள்ளார். நிமோ ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.பாலு தயாரிக்கும் இந்த படத்தில் யாரும் எதிர்பார்க்காத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறாராம். 

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி முன்னதாகவே மிரட்டல் லுக் கொடுத்ததினை தொடர்ந்து படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரைலரை பார்க்கும் போது சேதுபதி அதிரடி ஆக்சன் கெட்டப்பில் இறங்கி இருப்பது தெரிகிறது.  

வித்தியாசமான தோற்றத்தில் மக்கள் செல்வனின் எடக்கு ட்ரைலர்