×

Entertainment

Technology

ads

விஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு

விஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு
விஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு

முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக வளர்ந்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல படங்களில் தற்பொழுது நடித்து வருகிறார். இந்நிலையில் ஜூங்கா படத்திற்காக பிரான்ச் சென்று படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் விஜய் சேதுபதி தற்பொழுது படப்பிடிப்புகள் முடிந்து சென்னைக்கு வரவிருக்கிறார்கள். 

வருடத்திற்கு 7 படங்களை கொடுத்து வரும் சேதுபதி, தனது 25வது படத்தினை இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பஸ்ஸின் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி வரும் சீதக்காதி படத்தில் முதல் முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் இது வரை பார்த்திராத வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். 

ads

இப்படத்தின் முக்கிய காட்சிகள் முன்னதாகவே படமாக்கப்பட்டநிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் படக்குழுவினர் தொடங்க இருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று வேடங்கள் இடம் பெற்றுள்ள இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமானதாக இருக்கிறதாம். இதில் ஒரு கதாபாத்திரம் வயதான தோற்றத்தில் இருப்பதாகவும், இதற்காக மேக்கப் டெஸ்ட் செய்து கொள்வதற்காக சேதுபதி அமெரிக்கா சென்றிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.  

விஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு

ads