பாம்பன் படத்தில் தந்தையுடன் இணைந்த வரலட்சுமி

       பதிவு : Feb 18, 2018 22:40 IST    
varalakshmi sarathkumar acting in paamban movie with sarathkumar varalakshmi sarathkumar acting in paamban movie with sarathkumar

இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் சரத்குமார் கூட்டணியில் ஏய், சாணக்யா, சண்டமாருதம் போன்ற படங்களை தொடர்ந்து தற்போது ‘பாம்பன்’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரத்தை கையாளுகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.  இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி படத்தின் எதிர்பார்ப்பையும் அதிக அளவில் உயர செய்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இந்த கூட்டணியில் சரத்குமார் மகளான வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளார். அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

 

இந்த படத்தை எஸ்எஸ்கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்எஸ்கே சங்கரலிங்கம் தயாரிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இந்த படத்திற்கு என்எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பாம்பன் படத்தில் தந்தையுடன் இணைந்த வரலட்சுமி


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்