வேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்

       பதிவு : Jan 09, 2018 10:45 IST    
velaikkaran movie ezhu velaikkara video song release velaikkaran movie ezhu velaikkara video song release

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து கிறிஸ்துமஸ் விருந்தாக கடந்த 22ம் தேதி வெளிவந்த படம் 'வேலைக்காரன்'. இந்த படம் ரசிகர்கள், விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தின் மூலம் மலையாள முன்னனி நடிகர் ஃபகத் ஃபாஸில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். 24 AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளிவந்த கருத்தவனெல்லாம் கலீஜாம், இறைவா - உயிரே பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

மேலும் ராம்ஜி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் படத்தொகுப்பாளராகவும், டி.முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ள இப்படத்தில் சினேகா, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, விஜய் வசந்த், சதீஷ் என பல திரையுலக வட்டாரங்கள் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படக்குழு வேலைக்காரன் படப்பிடிப்பிற்கு போடப்பட்ட செட்டை மக்கள் பார்வைக்கு திறந்துவிட்டனர். ரசிகர்கள் அனைவரும் சென்று புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.  சமீபத்தில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'இறைவா - உயரே',  'கருத்தவெல்லாம் கலீஜாம்' போன்ற வீடியோ பாடல்களை படக்குழு வெளியிட்டது.  இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் 'எழு வேலைக்காரா' வீடியோ பாடலை இன்று இரவு 9:00PM மணிக்கு வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

 


வேலைக்காரன் படத்தின் எழு வேலைக்காரா வீடியோ பாடல்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்