ads

பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்

Bollywood Actress Sridevi Passes Away in Dubai

Bollywood Actress Sridevi Passes Away in Dubai

தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என தற்போது அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியறிந்து  அவரது ரசிகர்கள் மற்றும் கமல், ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் அவருடைய பிரிவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவி (54), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியை சொந்த ஊராக கொண்டவர். இவர் திரைப்பட துறைக்கு 4 வயதிலேயே நுழைந்தவர். தமிழில் 'துணைவன்' என்ற படத்தில் கடவுள் முருகன் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா போன்ற படங்களில் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் தமிழ் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.இவர் 2013-ஆம் ஆண்டில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது மற்றும் பிலிம்பேர் விருதுகள், 'மூன்றாம் பிறை' படத்துக்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை வென்றுள்ளார். 

இந்தி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்த நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இங்கிலிஸ் விங்கிலிஸ்', 'புலி' போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் 'மாம்' படம் வெளியானது. இந்நிலையில் துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்ரீதேவி நேற்று இரவு சென்றுள்ளார்.

இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய இழப்பு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது என சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு போனி கபூர் என்ற கணவரும், ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர்.  

பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம்