விஜய் 62 படத்தில் முதல் முதலாக இணையும் நட்சத்திரங்கள்

       பதிவு : Nov 03, 2017 14:17 IST    
விஜய் 62 படத்தில் முதல் முதலாக இணையும் நட்சத்திரங்கள்

மெர்சல் படத்தினை தொடர்ந்து விஜய் தனது 62வது படத்தினை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு இந்த புது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜயுடன் முதல் முதலாக இணையும் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் கதாநாயகிகள் என பல வித ட்விஸ்ட்கள் கலந்து எடுக்க இருக்கின்றனர்.   

இப்படத்தின் மூலம் தமிழில் முதல் முதலாக ஒளிப்பதிவு செய்வதற்கு மலையாளத்தில் வளர்த்து வரும் ஒளிப்பதிவாளர்கள் ஒருவரான கிரிஷ் கங்காதரன் இப்படத்தில் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இவர் பெரும்பாலும் துல்கர் படமான கலி, சோலோ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் த்ரிஷா நடிக்கும் முதல் மலையாளப்படமான 'ஹே ஜூட்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

 

இப்படத்தில் விஜயுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக முன்பே தகவல் வந்த நிலையில் தற்பொழுது இரண்டு ஹிந்தி நாயகி களமிறங்கியுள்ளனர் என் கூறுகின்றார்கள். ரஜினி நடிப்பில் வெளிவந்த 'லிங்கா' படத்தில் நாயகியாக நடித்த சோனாக்ஷி சின்ஹா என்பவரும் மற்றொருவர் ஹிந்தியில் வளர்ந்து வரும் கிரா அத்வானி நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.   

இப்படத்திற்கு அனிருத், ஏ ஆர் ரகுமான் மற்றும்  ஹரிஷ் ஜெயராஜ் போன்றவர்களின் இசை இடம் பெறுவதாக வதந்திகள் வந்த நிலையில், தற்பொழுது வந்த தகவலின் படி விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைக்க இருப்பதாக செய்தி வந்துள்ளது.   

 

புரியாத புதிர், கடலை மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் கரு போன்ற படங்களில் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.  


விஜய் 62 படத்தில் முதல் முதலாக இணையும் நட்சத்திரங்கள்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்