ads

விஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்

விஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்

விஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்

'சர்கார்' படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள 63வது படம் 'தளபதி 63'. இந்த படத்தின் மூலம் இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இருவரும், தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.  இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன்படி இந்த படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பினை துவங்கவுள்ளனர்.

தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது. இதனால் இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே வில்லு படத்திலும், சிவகாசியில் ஒரு குத்து பாட்டிலும் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார்.

இதன் பிறகு, இந்த தகவல் உண்மையானால் 9 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் இணைந்து 'தளபதி 63' படத்தில் நடிக்க உள்ளார். இது தவிர இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படக்குழு, இந்த படத்தில் பணிபுரியவுள்ள நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பினை வெளியிட உள்ளனர்.

விஜய் அட்லீ கூட்டணியில் இணையும் நயன்தாரா அருண் விஜய்