ads

இணையத்தில் கசிந்த சர்கார் பாடல் காட்சி - படக்குழு அதிர்ச்சி

அமெரிக்காவில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த சர்கார் படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'சர்கார்'. துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணியில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அமெரிக்காவில் மும்முரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை கண்டு படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மெர்சல் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையமைப்பில் பாடலாசிரியர் விவேக்கின் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல் காட்சியை ரசிகர் ஒருவர் செல்போனில் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஏஆர் ரஹ்மானின் ஸ்டைலிஷ் பாடலுக்கு விஜய் தனது நடன குழுவுடன் நடனம் ஆடுகிறார். இந்த விடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

இணையத்தில் கசிந்த சர்கார் பாடல் காட்சி - படக்குழு அதிர்ச்சி