ads

விஜய் சேதுபதியின் 96 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி முதன் முறையாக நடிகை த்ரிஷாவுடன் இணைந்து '96' என்ற படத்தில் நடித்து வருகிறார். 1996 ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஒளிப்பதிவாளரான பிரேம் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இவர் முன்னதாக பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு இயக்குனராக '96' படத்தின் மூலம் அறிமுகமாகிறார். காதலை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தின் காதலே காதலே என்ற சிங்கிள் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இதன் பிறகு இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தியில் வெளியாகி சீமராஜா, யூடர்ன் மற்றும் வட சென்னை போன்ற படங்களுடன் மோத உள்ளது. 

விஜய் சேதுபதியின் 96 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு