ads

விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்

மேற்கு தொடர்ச்சி மலை திரைவிமர்சனம்

மேற்கு தொடர்ச்சி மலை திரைவிமர்சனம்

நடிகர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி, தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி ப்ரொடக்சன் நிறுவனத்தின் மூலம் முன்னதாக ஆரஞ்சு மிட்டாய் மற்றும் ஜூங்கா ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த படங்களுக்கு பிறகு இவருடைய தயாரிப்பில் மூன்றாவது படமாக இன்று வெளியாகியுள்ள படம் 'மேற்கு தொடர்ச்சி மலை'. இந்த படம் வெளிவருவதற்கு முன்னாலே சிறந்த படம், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளர் போன்ற 11 விருதுகளை வென்றுள்ளது.

இந்த படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அனைவரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படம் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை நிலையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த படத்தினை அறிமுக இயக்குனரான லெனின் பாரதி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உணர்வு பூர்வமாக எடுத்துரைத்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்தந்த கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர் என்பதை விட வாழ்ந்திருக்கின்றனர் என்றே சொல்லலாம். வழக்கமான சினிமா உலகில் இருக்கும் காதல், சண்டை, காமெடி, வில்லத்தனம் இவற்றினை தவிர்த்து அந்த ஊரில் வாழ்ந்து மக்களின் நிலைமையை பற்றி இயக்குனர் லெனின் அழகாக எடுத்துரைத்துள்ளார். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வர் ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார். இளையராஜாவின் இசையமைப்பும் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. மொத்தத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பெருமை.இது கதையல்ல மேற்கு தொடர்ச்சி மக்களின் வாழ்க்கை.

விஜய் சேதுபதியின் மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்