ads

விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் இசை விரைவில்

junga movie audio rights bagged by think music india

junga movie audio rights bagged by think music india

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ஜூங்கா'. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். இவர் முன்னதாக ரெளத்திரம், இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கோகுல் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.

இந்த படத்தை இயக்குனர் கோகுல் எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'வனமகன்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சயீஷா நடித்துள்ளார். மேலும் காதலும் கடந்து போகும், கவண் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மலையாள நடிகை மடோனா சபாஸ்டின் இந்த படத்தில் இணைந்துள்ளார். தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் களமிறங்கியுள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதி ப்ரொடக்சன் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான அருண் பாண்டியன், கே கணேஷ், ஆர்எம் ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு டூட்லி ஒளிப்பதிவு அமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இசை உரிமையை திங்க் ம்யூசிக் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையில் இந்த படத்தின் இசையை விரைவில் வெளியிட உள்ளதாக திங்க் ம்யூசிக் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளது. மேலும் காதலர் தினத்தில் இந்த படத்தின் ஒரு பாடலையும் வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

junga movie songs release in valentines day 2018junga movie songs release in valentines day 2018

விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் இசை விரைவில்