ads

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூங்கா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் செக்க சிவந்த வானம், சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல், சாயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்கள் உருவாகி வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30இல் வெளியான 'இமைக்கா நொடிகள்' படத்திலும் நயன்தாராவிற்கு கணவராக நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இவர் சிம்புவின் 'வாலு' படத்தையும், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தையும் இயக்கியவர். இந்த படங்களுக்கு பிறகு தன்னுடைய மூன்றாவது படத்திற்கு விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார்.

தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா போன்ற படங்களை இயக்கிய விஜயா ப்ரொடக்சன் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் சேதுபதி 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி போன்ற படங்களின் பிசியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்த பிறகு இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Image Credit - @VijayaProdn (Twitter)Image Credit - @VijayaProdn (Twitter)

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் அறிவிப்பு