ads

விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி அறிவிப்பு

இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் சீதக்காதி படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் கோகுல் கூட்டணியில் கடந்த ஜூலை 27ஆம் தேதி வெளியான 'ஜூங்கா' படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி இமைக்கா நொடிகள், சீதக்காதி, செக்க சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது.

இதில் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீதக்காதி' படத்தில் 80வயது முதியவர் கதாபாத்திரம் மற்றும் இளமையான கதாபாத்திரம் என இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். முன்னதாக இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் வெளியீடு தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த படம் வரும் அக்டொபர் மாதம் 5ஆம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை பார்வதி, அர்ச்சனா, காயத்ரி, ஜெ மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார். இவர் முன்னதாக இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு பக்க கதை படத்திற்கும் இசைஅமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

விஜய் சேதுபதியின் சீதக்காதி வெளியீடு தேதி அறிவிப்பு