ads
குறும்படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் தளபதி விஜய் மகன் சஞ்சய்
வேலுசாமி (Author) Published Date : Sep 24, 2018 10:11 ISTபொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விருது வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். விஜய்க்கு பிறகு அவருடைய குடும்பத்தில் மகன் சஞ்சய்க்கு சினிமா துறையில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. 18 வயதான இவர் தன்னுடைய 9வது வயதிலே சினிமா துறையில் தனது அப்பாவின் 'வேட்டைக்காரன்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
வேட்டைக்காரன் படத்தில் 'நா அடிச்சா தாங்கமாட்ட' பாடலுக்கு அப்பாவுடன் இணைந்து அவருடைய ஸ்டைலில் நடனம் ஆடி அசத்தினார். அறிவியல் சார்ந்த துறையில் (Applied Information Sciences (AIS)) தனது படிப்பை முடித்துள்ள ஜேசன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஜங்க்சன் (Junction)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் சினிமா துறைக்கு மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
தற்போது தமிழ் சினிமா துறையில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. தற்போது வெளிவரும் ஏராளமான படங்களில் வாரிசு நடிகர்கள் தங்களது தனி திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவரை தவிர இவருடைய தங்கை மற்றும் விஜயின் மகளான திவ்யா சாஷா, இயக்குனர் அட்லீயின் 'தெறி' படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் தனது முகத்தை பதிவு செய்துள்ளார்.