ads

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3இல் இணைந்துள்ள பிரபலங்கள்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3இல் பேயாக விஜய் டிவி மைனா நடித்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 3இல் பேயாக விஜய் டிவி மைனா நடித்து வருகிறார்.

நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் நடிப்பில் 'சிவலிங்கா' படத்திற்கு பிறகு 'காஞ்சனா 3' உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக வேதிகா, 'முனி' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்து வருகிறார். இது தவிர மற்றொரு நாயகியாக பிக்பாஸ் ஓவியா இணைந்து நடித்து வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முனி வரிசையில் முன்னதாக வெளியான மூன்று பாகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் நான்காம் பாகம் புது கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

காமெடி கலந்த பேய் படமான இந்த படத்தில் பேயாக 'சரவணன் மீனாட்சி' மூலம் பிரபலமான மைனா நந்தினி நடித்து வருகிறார். வில்லனை கொல்ல துடிக்கும் கொடூர பேயாக நடித்து வருகிறாராம். இது தவிர இந்த படத்தில் வில் வித்தையில் சமீபத்தில் சாதனை படைத்த மூன்று வயது சஞ்சனாவும் நடிக்க உள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் 15இல் மூன்றரை மணிநேரத்தில் 1,111 அம்புகளை வேகமாக எய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை மூலம் கின்னஸ் புத்தகத்தில் அதிக விம்புகளை குறைந்த நேரத்தில் எய்த வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார். இவருடைய சாதனைக்கு ஏராளமான பொது மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ராகவா லாரன்சும் அவரை குடும்பத்துடன் தன் வீட்டிற்குள் வர சொல்லி பாராட்டுகளை தெரிவித்து விருந்தளித்துள்ளார். சிறுமி சஞ்சனாவிடம் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கிறதா என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தாராம்.

இதனால் அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க லாரன்ஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். லாரன்ஸின் நடிப்பு, எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு எஸ் தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் முந்தைய காஞ்சனா இரண்டு பாகங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.

ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3இல் இணைந்துள்ள பிரபலங்கள்